திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தமிழ்நாட்டை சேர்ந்த 1090 பேர் கடந்த 3 ஆண்டுகளில் திறன் பயிற்சி மூலம் வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் – மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:43PM by PIB Chennai
சுகாதார நலன், கட்டுமானம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், பசுமை தொழில்நுட்பம் போன்ற துறைகளில், சர்வதேச தரத்திற்கு ஏற்ப இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை அளிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட பல்வேறு நாடுகளுடன் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை அளிக்க இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. தகுதிகள் மற்றும் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்காக குறிப்பிட்ட விதிமுறைகளுடன் இத்தாலி மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் குடியமர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒருங்கிணைந்த பயிற்சி திட்டங்கள், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பரஸ்பர அங்கீகாரம் ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், சிங்கப்பூர் மற்றும் ஐக்கய அரபு எமிரேட்ஸ் நாடுகளுடன் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1090 பேர் இத்திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டு வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்தம் 33,145 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200375®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2200565)
आगंतुक पटल : 9