திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
விளிம்பு நிலை சமுதாய மக்களின் மேம்பாட்டிற்கான பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:44PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விளிம்பு நிலையில் உள்ள சமுதாய மக்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் கூட்டாண்மையின் அடிப்படையில் நாடு முழுவதும் மாதிரி பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரத்யேக பயிற்சி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது 597 பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த கால பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் 23 பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார். கடந்த 2022-23-ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்து வேலைவாய்ப்பு பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 1,900-ஆக உள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ், ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த 735 பேரும், 286 பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களும், 1,351 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200380®=3&lang=1
***
SS/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2200563)
आगंतुक पटल : 8