ஜல்சக்தி அமைச்சகம்
நீர் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:09PM by PIB Chennai
ஜல் ஜீவன் மிஷன், அம்ருத் மற்றும் அம்ருத் 2.0 போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசு, குடிநீர் வழங்கல் விஷயத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளை நிதி ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஆதரிக்கிறது.
அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.43,359.78 கோடி மதிப்புள்ள 1,403 நீர் வழங்கல் திட்டங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் ஒரு நாளைக்கு 5,011 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு திறன் மேம்பாடு அடங்கும். அம்ருத் 2.0-ன் கீழ், ரூ 1,18,226.62 கோடி (செயல்பாட்டு மேலாண்மை செலவு உட்பட) 3,516 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதில் 11,160 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு திறன் அடங்கும்.
மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு வி சோமன்னா இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.,
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200342®=3&lang=1
***
SS/PVK/SH
(रिलीज़ आईडी: 2200553)
आगंतुक पटल : 6