திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 1,72,336 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்- மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:48PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் 2015-ம் ஆண்டில் இருந்து பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி, மறு திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவை அளிக்கப்படுகிறது.
சந்தை தேவைக்கேற்பவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் திறன் பயிற்சியில் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 2022 – 23-ம் ஆண்டு முதல் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020 – 21-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6,824 பேர் பதிவு செய்தனர். 72,404 பேர் பயிற்சி பெற்றனர். 1,19,857 பேர் சான்றிதழ் பெற்றனர்.
2021 – 22-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 34,879 பேர் பதிவு செய்தனர். 29,057 பேர் பயிற்சி பெற்றனர். 17,250 பேர் சான்றிதழ் பெற்றனர். 2024 – 25-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 47,713 பேர் பதிவு செய்தனர். 85,689 பேர் பயிற்சி பெற்றனர். 62,587 பேர் சான்றிதழ் பெற்றனர். பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 1,72,336 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200387®=3&lang=1
***
SS/IR/LDN/RK
(रिलीज़ आईडी: 2200530)
आगंतुक पटल : 11