சுற்றுலா அமைச்சகம்
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது : அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 2:41PM by PIB Chennai
உலக சுற்றுலாப் போக்குவரத்து சந்தை குறித்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்றது. லண்டனில் 2025 நவம்பர் 4 முதல 6-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாக பிரதிநிதிகள் ஐஆர்சிடிசியுடன் இணைந்து இந்திய போக்குவரத்து தொழில்துறையைச் சேர்ந்த உள்நாட்டு சுற்றுலா நிறுவனங்கள் உள்ளிட்ட 30 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை) இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை இந்திய குடியேற்றத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 2024-ம் ஆண்டில் 205.69 லட்சமாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2023-2024-ல் சுற்றுலாத்துறையில் மொத்தம் 8 கோடியே 46 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக, காலமுறை அடிப்படையிலான தொழிலாளர் எண்ணிக்கை குறித்த ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200323®=3&lang=1
***
SS/SV/RJ/RK
(रिलीज़ आईडी: 2200484)
आगंतुक पटल : 8