குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சர்வதேச அளவில் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 1:39PM by PIB Chennai
அண்மைக்காலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில் 45.74 சதவீதமாக இருந்த வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி விகிதம் 2024-25-ம் ஆண்டில் 48.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம் என்ற கட்டமைப்பை வலுப்படுத்துவது மூலம் ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வர்த்தக நடவடிக்கைகளுக்கான நிதி வசதியை மேம்படுத்துவது மற்றும் நிதி சாராத தரநிலை மற்றும் இணக்க நடைமுறைகளுக்கான உதவிகளை வழங்கவும், சந்தை வாய்ப்புகள், சரக்குப் போக்குவரத்து வசதிகள் போன்ற வர்த்தகம் சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டு விநியோக சங்கிலியை சீராக பயன்படுத்துவதற்கு உதவுகிறது. இது வாகன உற்பத்தி, ஜவுளி, உணவுப் பதப்படுத்துதல், சரக்குப்போக்குவரத்து, கைவினை பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகளை வெகுவாக குறைத்துள்ளதுடன், சிறு, குறு மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கும் உதவிரமாக உள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி கரந்தலஜே தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200297®=3&lang=1
***
SS/SV/RJ/KR
(रिलीज़ आईडी: 2200352)
आगंतुक पटल : 16