சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தாம்பரம் மண்டலத்தில் இம்மாதம் 17-ம் தேதியன்று அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
08 DEC 2025 1:56PM by PIB Chennai
அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் தாம்பரம் மண்டலத்தின் சார்பில் 17.12.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
வாடிக்கையாளர்களின் குறைகளை சென்னை தாம்பரம் மண்டலத்தில் உள்ள அஞ்சல் அலுவலக மூத்த மேற்பார்வையாளர் மற்றும் தலைவர் கேட்டறிய உள்ளார். பார்சல், மணியார்டர், விரைவுத் தபால் குறித்த புகார்களுக்கு, அனுப்பப்பட்ட தேதி, அனுப்பியவரின் முழு முகவரி, பதிவு எண் உள்ளிட்ட முழு விவரங்களை குறிப்பிட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து அதற்கு தீர்வுகாணப்படாத நிலையில், இந்த குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம். புதிய புகார்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை தபால் மூலம் அனுப்பலாம்.
தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் உறை மேல் குறைதீர்ப்பு முகாம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் 2025 டிசம்பர் 12-ம் தேதிக்குள் தங்கள் குறைகள் குறித்த தபால்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200305®=3&lang=2
***
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2200319)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English