அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-ஐ தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
06 DEC 2025 6:44PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், பஞ்ச்குலாவில் 11வது இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எஃப்) 2025-ஐ தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் மிகப்பெரிய பொது அறிவியல் தொடர்பு நிகழ்வுகள் ஒன்றின் தொடக்கத்தைக் குறிக்கிறது. டிசம்பர் 6 முதல் 9 வரை நடைபெறும் நான்கு நாள் விழா, இந்தியாவின் அறிவியல் ஆற்றல்களை வெளிப்படுத்துவதையும், புதுமைகளைக் கொண்டாடுவதையும், அறிவியலுடன் பொதுமக்கள் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து விஞ்ஞானிகள், மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அறிவியல் தொடர்பாளர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆய்வகங்களுக்கு அப்பால் அறிவியலை பொது களத்தில் கொண்டு செல்வதை ஐஐஎஸ்எஃப் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். கொண்டாட்டம் (Celebration), தொடர்பு (Communication) மற்றும் தொழில் (Career) ஆகிய மூன்று "சி”கள் (C) மூலம் ஐஐஎஸ்எஃப்-ன் சாரத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த விழா இந்தியாவின் அறிவியல் பயணத்தைக் கொண்டாடுவதுடன், அறிவியலை பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது. மேலும் இளம் பங்கேற்பாளர்களுக்கு ஆராய்ச்சி, புதுமை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அடித்தளமாக அமைகிறது என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் சந்திரயான்-3, உள்நாட்டு தடுப்பூசி மேம்பாடு, உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு, டிஜிட்டல் நிர்வாக அமைப்புகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட துருவ ஆராய்ச்சி திறன்கள் உள்ளிட்ட கடந்த தசாப்தத்தின் முக்கிய சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், விஞ்ஞான பாரதியின் தலைவர் டாக்டர் சேகர் சி. மண்டே, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் அஜய் சூட், நிதி ஆயோக் உறுப்பினர்கள் டாக்டர் வி.கே. சரஸ்வத் மற்றும் டாக்டர் வி.கே. பால் உள்ளிட்ட மூத்த பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199905®=3&lang=2
***
AD/RB/RJ
(रिलीज़ आईडी: 2200165)
आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English