சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு பிரிவு 500-புத்தொழில் நிறுவனங்கள் என்ற மைல்கல்லைக் கடந்து நாட்டின் மிகப்பெரிய வலிமையான தொழில்நுட்ப புத்தொழில் மையமாக உருவெடுத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
03 DEC 2025 6:24PM by PIB Chennai
L5BC.jpg)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்)-ல் புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்புக்கு தொடர்பு முகமையாக விளங்கும் ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு பிரிவு, 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட வலிமையான தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்து புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
சந்தைகளை மறுவரையறை செய்பவை, தேசிய அளவிலான சவால்களை எதிர்கொள்ளக் கூடியவை, வலுவான வருவாய் ஈட்டக்கூடியவை, உலகளவிலான தொடர்புடையவர்கள், சமூக தாக்கத்தை ஏற்படுத்துபவை என பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவில் நாட்டின் முன்னணி மையமாக ஐஐடி மெட்ராஸ்-ன் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. அத்துடன் நாட்டின் வலிமையான தொழில்நுட்ப சூழல் அமைப்பிற்கு மாற்றத்தக்க பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த மைல்கல் அமைந்துள்ளது.
ஐஐடிஎம்ஐசி இதுவரை மொத்தம் 511 புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்துள்ளது. அவற்றின் சமீபத்திய முதலீடு நிதி திரட்டலின் அடிப்படையில் மொத்த மதிப்பீடு ரூ.53,000 கோடியைக் (6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கடந்திருப்பதுடன், 11,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
2024-25-ம் நிதியாண்டில் இந்த தொழில் ஊக்குவிப்பு பிரிவு தனது “ஸ்டார்ட்அப் சதம்” திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட புதிய வலிமையான தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியது. நடப்பு நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 100-க்கும் மேற்பட்ட புதிய புத்தொழில் நிறுவன விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வலிமையான தொழில்நுட்ப இயந்திரம் ஐஐடி மெட்ராஸ்-ல் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநரும், ஐஐடிஎம்ஐசி-யின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான பேராசிரியர் வி. காமகோடி, பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கான வளர்ச்சியடைந்த இந்தியா@2047 என்ற தொலைநோக்கு அடிப்படையில் அனைத்து தற்சார்பு முக்கிய தொழில்நுட்பங்களையும் இயக்கும் சிறந்த புத்தொழில் நாடாக இந்தியா திகழும் என்று தெரிவித்தார்.
***
AD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2198324)
வருகையாளர் எண்ணிக்கை : 35