சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நாக்பூரில் 'தேசிய பசுமை பட்டாசு ஆற்றல்சால் மையம்' மற்றும் காரைக்குடியில் 'பசுமை பட்டாசு ஆற்றல்சால் மையம்' ஆகியவற்றை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2025 8:23PM by PIB Chennai

நாக்பூரில் உள்ள சிஎஸ்ஐஆர் -தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-NEERI) “பசுமை பட்டாசுகளுக்கான தேசிய ஆற்றல்சால் மையம்” மற்றும் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் -மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CECRI) “பசுமை பட்டாசுகளுக்கான ஆற்றல்சால் மையம்” ஆகியவற்றை இன்று சென்னை, தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய  டாக்டர் கலைச்செல்வி, லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் பல நடுத்தர மற்றும் சிறு தொழில்களை ஆதரித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை உருவாக்குவதில் சிஎஸ்ஐஆர் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தார். நாக்பூர் மற்றும் காரைக்குடியில் ஆற்றல்சால் மையங்களை உருவாக்குவது, நாடு முழுவதும் உள்ள தொழில்துறைகளுக்கு சிஎஸ்ஐஆர் வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197874&reg=3&lang=1

(Release IID: 2197874)

****

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2197924) வருகையாளர் எண்ணிக்கை : 79
இந்த வெளியீட்டை படிக்க: English