கனரகத் தொழில்கள் அமைச்சகம்
பெங்களூரு – சென்னை விரைவுச் சாலையில் 30 மின்னேற்றி நிலையங்கள்
प्रविष्टि तिथि:
02 DEC 2025 3:38PM by PIB Chennai
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அளித்த தகவலின் படி ஐஓசிஎல், பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய 3 எண்ணெய் சந்தை நிறுவனங்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் 236 மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி நிலையங்களை அமைத்துள்ளது.
பெங்களூரு – சென்னை விரைவுச் சாலையில், 26 மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டு 4 மின்னேற்றி நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. பெங்களூரு – ஐதராபாத் நெடுஞ்சாலையில் (என் எச் 44) 41 மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டு 23 மின்னேற்றி நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. பெங்களூரு –மைசூர் விரைவுச் சாலையில் (என்எச் 275) 22 மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டு 11 மின்னேற்றி நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
பெங்களூரு – புனே நெடுஞ்சாலையில் (என் எச் 48) 60 மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டு 49 மின்னேற்றி நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு பூபதிராஜூ ஸ்ரீநிவாச வர்மா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197548®=3&lang=1
***
AD/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2197801)
आगंतुक पटल : 5