சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டங்கள்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 3:39PM by PIB Chennai

நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தேவையான நிதியுதவியை அளிக்கும் வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்நாட்டு ஆன்மீக சுற்றுலா மற்றும் யாத்ரீகர்களுக்கான புனரமைப்பு, ஆன்மீகம், பாரம்பரிய மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இதில், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளும் அடங்கும்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மத்திய சுற்றுலா அமைச்சகம் இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,726.74 கோடி ரூபாய் மதிப்பிலான 54 திட்டங்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் வெவ்வேறு வகையான முக்கியத்துவம் கொண்ட தளங்களின் அடிப்படையில் சுற்றுலாவை மேம்படுத்த 5,290.30 கோடி ரூபாய் மதிப்பிலான 76 திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மக்களவையில்  இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  அளித்த பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196921&reg=3&lang=1

****

AD/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2197217) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी