சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

உள்நாட்டுப் பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாட்டை விரைவுபடுத்த ஐஐடி மெட்ராஸ், இந்திய கடற்படை, அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் ஆகியவை உத்திசார் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இடுகை இடப்பட்ட நாள்: 01 DEC 2025 6:42PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய கடற்படை, அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் உள்நாட்டு மேம்பாட்டை விரைவுபடுத்த உத்திசார் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது.

2025 நவம்பர் 25 அன்று தில்லியில் நடைபெற்ற இந்திய கடற்படையின் ‘ஸ்வாவலம்பன் 2025’ நிகழ்வின்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் கூட்டு மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படி பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவளிக்கவும், ஒருங்கிணைந்த புதுமை கண்டுபிடிப்பு சூழலை உருவாக்குவதற்கும், சென்னை ஐஐடி-யின் கல்விசார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைமை, இந்திய கடற்படையின் களம்சார்ந்த தேவைகள், அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ்-ன் தொழில்துறை பொறியியல் மற்றும் உற்பத்தித் திறன்கள் ஆகியவற்றை முத்தரப்பு கூட்டாண்மை ஒருங்கிணைக்கிறது.

இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் சென்னை ஐஐடி-யின் விண்வெளி பொறியியல் துறையின் பேராசிரியர் திரு பி ஏ ராமகிருஷ்ணா இக்கூட்டு முயற்சியின் விளைவுகள் பற்றி கூறியபோது, இந்த உத்திசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆயுதப் படைகளின் தற்போதைய- வளர்ந்து வரும் தொழில்நுட்ப சிக்கல்களை கூட்டாக நிவர்த்தி செய்வதற்கான கூட்டு கட்டமைப்பை நிறுவுகிறது என்று குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆய்வக கண்டுபிடிப்புகளை நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகளாக மாற்றுவதை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த கூட்டுமுயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இக்கூட்டாண்மையின் வெற்றிகரமான முடிவுகள், முக்கியமான உத்திசார் உணர்திறன்மிக்க தொழில்நுட்பங்களில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இலக்குகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று கூறினார். அத்துடன் உலகளாவிய பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டுமுயற்சி குறித்துப் பேசிய அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு கருணாகர் ரெட்டி,  இந்த உத்திசார் புரிதல் நமது ஆயுதப் படைகளின் மிக முக்கிய, சிக்கலான அறிக்கைகளுக்கு விரிவான முறையில் தீர்வுகாண உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2197148) வருகையாளர் எண்ணிக்கை : 83
இந்த வெளியீட்டை படிக்க: English