சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ், துறைமுகங்களுக்கான இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

प्रविष्टि तिथि: 26 NOV 2025 4:41PM by PIB Chennai

 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், துறைமுகங்களுக்கான நாட்டின் முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்கி அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தேவைகளின் அடிப்படையில் துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் மூலம், இந்த அமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல்சார் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை உள்நாட்டுமயமாக்குவதற்கு இந்த அமைப்பு பெரிய ஊக்கத்தை அளிப்பதுடன் இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதையும் குறைக்கச் செய்யும். இதில் ஈடுபட்டிருப்போருக்கு உண்டாகும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இணைப்பதற்கும் இந்த அமைப்பை எளிதாக அளவிடவோ மேம்படுத்தவோ செய்யலாம்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலக் குறியீடு, தரவுத்தளங்கள் மற்றும் தீர்வின் அம்சங்கள் மீது முழுமையான மற்றும் உத்திசார் கட்டுப்பாட்டை உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை கொண்டுள்ளன.

இந்த முறையை விளக்கும் சென்னை ஐஐடி பேராசிரியர் கே. முரளியின் ஆங்கிலம் மற்றும் தமிழ் காணொலிகளை பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் - https://drive.google.com/drive/folders/1xeMI4C9ulHuAeD8X-mj4Kp0t2lGpInU4?usp=sharing

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194736

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2194915) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English