சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வீடுதேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவையை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அளிக்கிறது
प्रविष्टि तिथि:
24 NOV 2025 5:54PM by PIB Chennai
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், பாதுகாப்புப்படை ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் வீட்டிலிருந்தபடியே, மின்னணு வாழ்நாள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் பெறமுடியும்.
பயோமெட்ரிக் அல்லது FACE RD செயலியை பயன்படுத்தி, மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70/- தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்பித்துள்ளார்கள். தமிழக அஞ்சல் வட்டத்தில் உள்ள 11800 அஞ்சலகங்களில் பணி புரியும் 16000 க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மூலம் இந்த சேவையைப் பெற முடியும்
இந்த வசதியை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2194328)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English