உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதல் நினைவையொட்டி நாளை அங்கு நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Posted On: 25 NOV 2025 11:43AM by PIB Chennai

மும்பையில் 26/11 தீவிரவாதத் தாக்குதல்களில் உயிர்த் தியாகம் செய்தவர்கள், உயிர் பிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், ஆகியோரை நினைவு கூரும் வகையில், கேட்வே ஆஃப் இந்தியாவில்    நாளை ‘எப்போதும் இல்லை’ என்ற கருப்பொருளில் நினைவு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு  மும்பையில் உள்ள  தேசிய பாதுகாப்புப் படை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான நினைவிடத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களது பெயர்கள் இடம் பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அத்துடன் மும்பையில் உள்ள 11 கல்லூரிகள் மற்றும் 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ‘எப்போதும் இல்லை’ என்ற கருப்பொருளில் உறுதி மொழி ஏற்க உள்ளனர்.

அந்த இடத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக மக்கள் தங்கள் கருத்துக்களை எழுதுவதற்கான  பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உயிர் பிழைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193974

***

SS/IR/KPG/SH


(Release ID: 2194316) Visitor Counter : 8
Read this release in: English , Marathi