சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
காவலூரில் உள்ள வைணு பாப்பு வானியற்பியல் ஆய்வகத்தில் 500 மாணவர்களுடன் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது
प्रविष्टि तिथि:
24 NOV 2025 8:34PM by PIB Chennai

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (ஐஐஏ) வைனு பாப்பு ஆய்வகம் (விபிஓ) நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எஃப்) 2025-க்கான முன்னோட்ட நிகழ்வாக, நவம்பர் 24, 2025 அன்று ஒரு பெரிய அளவிலான மாணவர் தொடர்பு நிகழ்ச்சியை நடத்தியது. சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 190 வெவ்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 மாணவர்களும் 50 ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு நிஜ அறிவியல் உலக வெளிப்பாட்டை வழங்கும் நோக்கில், இந்தப் பயணம், ஐஐஎஸ்எஃப் 2025 வரையிலான தேசிய தொடர்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. ஐஐஎஸ்எஃப் 2025, டிசம்பர் 6-9 தேதிகளில் ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெறும். ஒரு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு அறிவியல் மூலம் வளர்ச்சி என்பது இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
"எங்கள் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை வரவேற்று, வைனு பாப்பு ஆய்வகத்தை அவர்கள் சுற்றிப் பார்க்க வாய்ப்பு வழங்கியதுடன், இந்த இளம் மனங்களில் வானியல் ஆர்வத்தை வளர்ப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று ஐஐஏ இயக்குநர் பேராசிரியர் அன்னபூர்ணி சுப்பிரமணியம் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193789
***
(Release IID: 2193789)
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2193850)
आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English