தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலுங்கானா மாநிலத்தில் (ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ்) சங்காரெட்டி நகர்ப்புறப் பகுதிகள், அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்கிறது

Posted On: 24 NOV 2025 2:49PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உரிமம் பெற்ற சேவைப் பகுதிதிகளின் கீழ், தெலுங்கானா மாநிலத்திற்கான அதன் சேவைகள் தொடர்பான பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது 2025 அக்டோபர் மாதத்தில் சங்காரெட்டி நகர்ப்புறப் பகுதிகளில்  வழங்கப்பட்டு வரும் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்த பரிசோதனைகளை  உள்ளடக்கியது. ஹைதராபாத்தில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவனத்தின் முக்கிய இடங்கள், கிராமப்புற குடியிருப்புப் பகுதிகள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் நிகழ்நேர உலக மொபைல் வலைதள செயல்திறனை சோதித்துப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 7, 2025 முதல் அக்டோபர் 9, 2025 வரை, ட்ராய் சோதனைக்  குழுக்கள் 355.0 கிமீ தொலைவில் உள்ள சங்காரெட்டி நகரப்புறப் பகுதிகள் மற்றும் 5 முக்கிய இடங்களில் விரிவான சோதனைகளை மேற்கொண்டன. மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களில் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற மொபைல் சேவைகளும் இதில் அடங்கும். இது பல அலைபேசி சேவைகளின் திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193528

***

SS/SV/SH


(Release ID: 2193748) Visitor Counter : 3