மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த 3 நாள் தேசிய பயிலரங்கு

Posted On: 21 NOV 2025 1:01PM by PIB Chennai

ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த 3 நாள் தேசிய பயிலரங்கை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்னணு நிர்வாகப் பிரிவு மற்றும் ரோபார் இந்தியத் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது. நவம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற  இந்தப் பயிலரங்கில், ட்ரோன் தொழில்நுட்பம், நிர்வாகம், உள்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் சேவைகள் துறையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது குறித்தும் அதனை சிறந்த முறையில் கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இந்தப் பயிற்சியில் பங்கேற்றவர்கள் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள், டிஜிட்டல் விண்வெளி தளம், கணக்கெடுப்பு, நிலவரைபடம் தயாரிப்பு, வேளாண் பயன்பாடு, சுரங்கச் செயல்பாடுகள், பேரிடர் மேலாண்மை, ட்ரோன் தடயவியல் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு எதிரான செயல்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192426

***

AD/SV/KPG/SH


(Release ID: 2192655) Visitor Counter : 9