சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தோல் ஏற்றுமதி கழகத்தில் தோல் தொழில் உறுப்பினர்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
प्रविष्टि तिथि:
20 NOV 2025 8:08PM by PIB Chennai

தோல் ஏற்றுமதி கழகத்தில் (CLE), தோல்துறை உறுப்பினர்களுக்காக பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நவம்பர் 19, 2025 அன்று நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு ஆர். செல்வம், தோல் துறையில் முறையான வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதிலும், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகளை விரிவுபடுத்துவதிலும் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கழகத்தின் துணை இயக்குநர்கள் திரு ஏ. ஃபயாஸ் அகமது மற்றும் திரு இ. எல். சாம்சன் ஆகியோர் பணியமர்த்துபவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் இணக்கத்தை எளிதாக்குவதில் கழகத்தின் தொடர்ச்சியான ஆதரவை வலியுறுத்தினர்.
இபிஎஃப்ஓ-இன் பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு எம். விஜய் ஆனந்த், திட்டத்தின் நோக்கங்கள், தகுதி அளவுருக்கள் மற்றும் சேர்க்கை செயல்முறை குறித்து விரிவான விளக்கினார். செயல்படுத்தல் மற்றும் நிறுவன அளவிலான நடைமுறைகள் குறித்து பங்கேற்பாளர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.
***
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2192343)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English