எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறிய இறக்குமதியாளர்களின் எஃகு இறக்குமதி பதிவை எளிதாக்க 'சாரல் சிம்ஸ்' என்ற புதிய தளம் அறிமுகம்

प्रविष्टि तिथि: 20 NOV 2025 1:54PM by PIB Chennai

குறு சிறு, நடுத்தர நிறுவனங்களும் பிற சிறு இறக்குமதியாளர்களும், இரும்பு, எஃகு பொருட்கள் தொடர்பானவற்றை இறக்குமதி செய்வதற்கு, எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பான சிம்ஸ்-ன் கீழ் கட்டாய பதிவு செயல்முறை நடைமுறையில் உள்ளது. இதை எளிதாக்கும் முயற்சியாக, சாரல் சிம்ஸ் என்ற புதிய பதிவு தள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள் இப்போது www.sims.steel.gov.in/SARAL என்ற தளத்தில் இந்த வசதியைப் பெறலாம். இதில் பதிவு செய்யும் போது, இறக்குமதியாளர்கள் இந்த தளத்தில் மொத்த இறக்குமதி அளவை மட்டும் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு சாரல் சிம்ஸ் பதிவு எண் வழங்கப்படும்.  அதன் மூலம் அவர்கள் ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் எஃகு இறக்குமதி செய்யலாம். தனித்தனியாக சிம்ஸ் எண் பெற வேண்டிய தேவை இல்லை. அதிகபட்சமாக ஆயிரம் மெட்ரிக் டன் வரை இறக்குமதி மேற்கொள்ளலாம்.

இறக்குமதியாளர்கள் குறிப்பிட்ட நிதியாண்டில் உருவாக்கப்பட்ட சாரல் சிம்ஸ் பதிவை வைத்து அடுத்த நிதியாண்டின் ஏப்ரல் 30 வரை இறக்குமதி செய்யலாம். இந்த நடைமுறை 21.11.2025 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192033

***

(Release ID: 2192033) 

SS/PLM/KPG/SH


(रिलीज़ आईडी: 2192307) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी