சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எப்) 2025 முன்னோட்ட நிகழ்ச்சியை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஏற்பாடு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2025 3:25PM by PIB Chennai

11 - வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் (என்சிசிஆர்) 2025 நவம்பர் 14 நடைபெற்றது. இந்த விழா 2025, டிசம்பர் 6 முதல் 9 - ம் தேதி வரை சண்டிகரில் நடைபெறவுள்ளது.

"அறிவியலால் ஏற்படும் முன்னேற்றம்" என்பதே இந்த ஆண்டிற்கான  கருப்பொருளாக உள்ளது. தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தேசிய அளவில் தன்னம்பிக்கையை விரைவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2025, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி), உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி), அணுசக்தித் துறை (டிஏஇ), விண்வெளித் துறை (டிஓஎஸ்) மற்றும் விஞ்ஞான பாரதி (விஐபிஎச்ஏ) ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆர் எஸ் கங்காரா, தேசிய அளவிலான மீள்தன்மையுடன் கூடிய கடலோர மற்றும் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பைக்  தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார். 11,099 கிமீ நீளமுள்ள நாட்டின் கடற்பரப்பில், பருவநிலைக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகள், சமூக அளவில் தயார்நிலை மற்றும் நீடித்த கடலோர மேலாண்மை போன்ற அம்சங்களில் இந்த மையத்தின் அறிவியல் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்திய சர்வதேச அறிவியல் விழாவை நடத்துவதில் மத்திய புவி அறிவியியல் அமைச்சகத்தின் தலைமைத்துவத்தையும், அறிவியல் ரீதியிலான வளர்ச்சிக்கான நாட்டின் ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் விஞ்ஞானி டாக்டர் ஜக்வீர் சிங் விளக்கினார். இந்த தேசிய அறிவியல் இயக்கத்தை ஒழுங்கமைப்பதில் அமைச்சகத்தின் செயல்பாடுகள், கடல்சார் கண்காணிப்பு, முன்கூட்டியே எச்சரிக்கை, பருவநிலை தொடர்பான சேவைகள் மற்றும் ஆழ்கடல் ஆய்வு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். இது நாட்டின் அறிவியல் திறன்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்துகிறது என்றும், நீடித்த தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கான நாட்டின் நிலைப்பாட்டையும் மேம்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190298

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2190327) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English