சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியாவின் பல்வேறு மொழிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகத்தை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
14 NOV 2025 4:29PM by PIB Chennai
இந்தியாவின் பல்வேறு மொழிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகத்தை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறை வாயிலாக மொழிகளின் பன்முகத்தன்மையை ஆய்வு செய்ய இது வகை செய்கிறது.
சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வகம் நாட்டிலேயே முதலாவது மொழி குறித்த ஆய்வகமாகும். நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளை முறையாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை இது உறுதி செய்கிறது.
இந்த மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகத்தை இம்மாதம் 10-ம் தேதி அன்று ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ராஜேஷ்குமார் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அனின்திதா சாஹூ அத்துறை ஆசிரியர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேம்பட்ட சோதனை முறைகளைப் பயன்படுத்தி, மனிதர்கள் மொழிகளை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதையும் மொழி வளத்தை உருவாக்குவது மற்றும் அது சார்ந்த நடைமுறைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய இது உதவுகிறது.
இந்த ஆய்வகம் மனிதனை மையமாகக் கொண்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு பங்களிக்கவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் மொழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தியாவில் உள்ள மொழிகளின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை பாதுகாப்பதையும் நீண்டகால நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190045


***
SS/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2190056)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English