சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சூரியசக்திஅமைப்புமுறையின் நிறுவல் மற்றும் பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி திருச்சியில்தொடங்கியது 

प्रविष्टि तिथि: 10 NOV 2025 9:21PM by PIB Chennai

இந்திய அரசின் தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி ஆகியவை இணைந்து, தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தொழில்முனைவோருக்கான சிறப்பு பயிற்சி ஒன்றை நடத்துகின்றன.

சூரியசக்தி ஒளிமின்னழுத்திய அமைப்புமுறைகளை நிறுவவும், பராமரிக்கவும் தேவையான தொழில்திறன்களை வழங்கும் நோக்கில் இந்த இலவச பயிற்சி 2025,  நவம்பர் 10  முதல் 19, வரை நடைபெறுகிறது.

பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி இன்று (10.11.2025) திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் திருமதி ஜி. அகிலா விழாவைத்  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்தப் பயிற்சி, சூரியசக்தித் துறையில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள்  மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188563

***

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2188567) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English