சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலையில் நிலைத்தன்மைக்கான ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த 5 நாள் பயிலரங்கு தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2025 7:23PM by PIB Chennai

"நிலைத்தன்மையை நோக்கிய ட்ரோன் தொழில்நுட்பத்தில் கணினி மற்றும் நடைமுறை அம்சங்கள்" என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிலரங்கு மற்றும் நேரடி பயிற்சி திட்டம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறையும், ரூர்கேலா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயந்திர பொறியியல் துறையும் இணைந்து நடத்தும் இந்த பயிலரங்கு , மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  நிதியுதவியுடனும், தெற்காசிய அறக்கட்டளையின்  ஆதரவுடனும் கலாச்சார மாநாட்டு மையத்தின் கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

பயிலரங்கின்  ஒருங்கிணைப்பாளரும், பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறையின் உதவிப் பேராசிரியருமான டாக்டர் கே. கார்த்திக் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்வேறு துறைகளில் நிலையான தீர்வுகளை மேம்படுத்துவதில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் மற்றும் இந்த திட்டத்தின் நோக்கங்களை அவர் விளக்கினார்

மதன்ஜீத் பசுமை எரிசக்தி தொழில்நுட்ப புலத்தின் முதன்மையர் பேராசிரியர் பி.எம். ஜாபர் அலி மற்றும் என்ஐடி ரூர்கேலாவின் இயந்திர பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி.எஸ். பாலாஜி ஆகியோர் இந்த முயற்சிக்கான பங்களிப்புகளுக்காக கவுரவிக்கப்பட்டனர்.

விர்ஜீனியா டெக் இந்தியாவின் இயக்குனர் டாக்டர் எம்.கே. பத்மநாபன் தலைமை உரையாற்றினார். விவசாயம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பல்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயக்குனர்  பேராசிரியர் க தரணிக்கரசு. தொடக்க உரையாற்றினார். ஆளில்லா வான்வழி அமைப்புகள் என்ற வளர்ந்து வரும் துறையில் இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே திறன் மேம்பாடு மற்றும் புதுமையை வளர்ப்பதில் புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி ரூர்கேலாவின் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார்.

பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறையின் தலைவரும், யுனெஸ்கோ  பேராசிரியர் ஆர். அருண் பிரசாத் நன்றி உரை நிகழ்த்தினார். இந்த பயிலரங்கில் , ட்ரோன் கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வான்வழி அமைப்புகள், விமான கட்டுப்பாடு மற்றும் ஃபார்ம்வேர் அடிப்படைகள், ட்ரோன் பாகங்களின் 3டி வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல், மற்றும் ட்ரோன் விமான செயல்முறை விளக்கங்கள்  போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய நிபுணர் விரிவுரைகள் மற்றும் நேரடி பயிற்சி அமர்வுகள் நடைபெறுகின்றன.

கல்வி ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பங்கேற்பை உள்ளடக்கிய இந்தத் திட்டம், நவீன ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாடுகளில் கணினி மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெற அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. நிலைத்தன்மையை நோக்கிய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தப் பயிலரங்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

AD/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2187867) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English