ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிலவளத்துறையும், ஆந்திரப் பிரதேச அரசும் குண்டூரில் நவம்பர் 10, 11 தேதிகளில் தேசிய நீர்நிலை மாநாட்டை நடத்தவுள்ளன

Posted On: 07 NOV 2025 4:03PM by PIB Chennai

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலவளத்துறை, ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் 2025 நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தேசிய நீர்நிலை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதுமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் 2.0 ன் அமலாக்கம், 2026 முதல் அமலாக்கம் செய்யப்படவுள்ள நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் அணுகுமுறை, விழிப்புணர்வு மற்றும் மக்கள் பங்கேற்பை அதிகரிப்பதற்கான நீர்நிலை பெருவிழா, நீர்நிலைகள் புனரமைப்பு இயக்கம் தொடங்குதல் போன்றவை இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

பொதுக்கூட்டம் ஒன்றில் தொடங்கப்படவுள்ள நீர்நிலை திருவிழாவில் மத்திய ஊரக மேம்பாடு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி, ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.

மக்கள் பங்கேற்பை அதிகரிக்க நீர்நிலை பெருவிழா நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளது. நீர்நிலை மக்கள் பங்கேற்புக்கான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பை வழங்குதல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உடல்உழைப்பு செலுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகியவையும் இந்தத்  திருவிழாவின் செயல்பாடுகளில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187356

***

AD/SMB/AG/RJ


(Release ID: 2187595) Visitor Counter : 3
Read this release in: English , Urdu