சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை தொலைத்தொடர்பு துறை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரத்தியேக தொலைபேசி எண்களுக்கான ஏலத்தை தொடங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2025 5:48PM by PIB Chennai

சென்னை தொலைத்தொடர்பு துறை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1986 பிரத்தியேக தொலைபேசி எண்களுக்கான ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்தில் அதிக அளவில் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையிலான தொலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளது.

9499000555

9499006006

9499000003

9498999777

9498000011

9498333000

9499994300

9499993443

9499022422

9498450123

ஏலம் தொடர்பான விவரங்கள்:

பிரத்யேக தொலைபேசி எண்களுக்கான ஏல நடைமுறைகள் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர்கள் https://eauction.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்கள் பாதுகாப்பான எளிதாக நினைவில் கொள்ளத்தக்க வகையில் இந்த ஏலத்தில் இடம்பெறும் தொலைபேசி எண்கள் அவர்களது வர்த்தக முத்திரை மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தி கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்.

***

SS/SV/RK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2187550) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English