சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மரில் மாணவர்களின் மனநலன் காக்கும் ஜெ-கேர்ஸ் மையம் தொடக்கம்
प्रविष्टि तिथि:
05 NOV 2025 12:34PM by PIB Chennai
மாணவர்களின் மனநலனை காக்கும் வகையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தேசிய பணிக்குழுவை நியமித்தது. இக்குழு மாணவர்களின் மனநலன் சார்ந்த பல்வேறு அம்சங்களை உறுதிசெய்யும். இதன் தொடர்ச்சியாக ஜிப்மர் தற்போது தனது மாணவர்களின் மனநலனை முன்னிறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆண்டு முழுவதும் தேவையான இடைவெளிகளில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை மாணவர்களுக்காக நடத்துவதோடு அதற்கான கட்டமைப்புகளையும் ஜிப்மர் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது J-CARES (JIPMER CENTRE FOR COUNSELING, ASSISTANTS, RESILENCE AND EMPOWERMENT OF STUDENTS) CELL என்று அழைக்கப்படும் மாணவர்களின் மனநலனுக்கான பிரத்யோகமான மையத்தை ஜிப்மர் துவக்கியுள்ளது. இந்த பிரிவு ஜிப்மரில் பயிலும் இளநிலை, முதுநிலை மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய மனநல ஆலோசனையும் வழங்கும் மையமாகவும், ஆரோக்கியமான மனநலனை உருவாக்கும் ஒரு இணக்கமான சூழலை நிர்வகிக்கும் மையமாகவும் திகழும்.
இம்மையத்தைக் குறித்து ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர சிங் நேகி அவர்கள் J-CARES CELL என்பது பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குழு என்றும் ஜிப்மர் மருத்துவக் கல்வி துறையின் கீழ் இக்குழு செயல்படும் என்றும் தேவையான பயிற்சி மற்றும் கட்டமைப்புகளையும் இக்குழு மூலம் ஜிப்மர் செயல்படுத்தவுள்ளது என்றும் குறிப்பிட்டார். முறையாக பயிற்சிப் பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றும் உடன் பயிலும் மாணவர்களுக்கிடையேயான இணக்கமான அணுகுமுறையை மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டும் இம்மையம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு மின்னஞ்சல், புகார்பெட்டி, 24X7 அலைபேசி சேவை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் இம்மையத்தை எந்நேரமும் எளிதாக அணுகமுடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்மையம் மனநல விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் மாணவர்களிடையே வருடம் முழுவதும் நடத்தவுள்ளதாகவும் இம்மையம் மூலம் ஜிப்மரில் பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதை ஜிப்மர் உறுதி செய்கிறது என்றும் குறிப்பிட்டார். இதற்காக ஜிப்மர் அனைத்துவிதமான முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்று உறுதியளித்தார்.
AD/SH
(रिलीज़ आईडी: 2186609)
आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English