நித்தி ஆயோக்
வேளாண்மையில் மறுமலர்ச்சி: நித்தி ஆயோக்கின் புதிய திட்ட வரைவு
प्रविष्टि तिथि:
03 NOV 2025 4:01PM by PIB Chennai
நித்தி ஆயோக்கின் முன்னணி தொழில்நுட்ப மையம் குஜராத் மாநிலம் காந்திநகரில் வேளாண்மையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் "வேளாண்மையின் மறுவடிவமைப்பு: எல்லைப்புற தொழில்நுட்பம் வழிநடத்தும் மாற்றத்திற்கான திட்ட வரைவு" என்ற புதிய திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் குஜராத் முதல்வர் திரு. பூபேந்திரபாய் படேல், நித்தி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி திரு. பி.வி.ஆர். சுப்ரமணியம் மற்றும் பல உயர் அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்ட வரைவு, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட விவசாய நிலப்பரப்பில் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் வருமானம் ஆகியவற்றை மேம்படுத்த எல்லைப்புறத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு உத்திசார் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறது.
இதில் பருவநிலைக்கேற்ற விதைகள், டிஜிட்டல் ட்வின்ஸ், துல்லியமான விவசாயம், செயற்கை நுண்ணறிவு, மற்றும் மேம்பட்ட இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அடங்கும்.
இந்தத் திட்டம் விவசாயிகளை விருப்பமுள்ளவர்கள், மாற்றம் காணும் நிலையில் உள்ளவர்கள், மற்றும் மேம்பட்டவர்கள் என மூன்று வகைகளாகப் பிரித்து, சிறு விவசாயிகளிலிருந்து வணிக ரீதியான சாகுபடியாளர்கள் வரை அனைவரின் சவால்களுக்கும் ஏற்பச் செயல்படக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு. பூபேந்திரபாய் படேல் பேசுகையில், "குஜராத், டிஜிட்டல் பயிர் ஆய்வு மற்றும் ஐ-கிசான் வலைத்தளம் போன்ற முயற்சிகள் மூலம் இந்தியாவின் விவசாய மாற்றத்திற்கு தலைமை தாங்கத் தயாராக உள்ளது. தொழில்நுட்பம் நம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்கை அடைய உதவும்," என்றார்.
நித்தி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி திரு. பி.வி.ஆர். சுப்ரமணியம் பேசுகையில், "இந்தியாவில் எந்த இரண்டு விவசாயிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல; எனவே, தொழில்நுட்பத் தீர்வுகளும் அந்தப் பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும். இந்தத் திட்ட வரைவு தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையை வலியுறுத்துகிறது," என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185859
வெளியீட்டு அடையாள எண் : 2185859
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2186066)
आगंतुक पटल : 30