கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகாத் ஸ்ரீ ஹர்மந்திர் ஜி பாட்னா சாஹிபில், ஸ்ரீ குரு கோபிந்த் சிங் மகாராஜ் மற்றும் மாதா சாஹிப் கவுர் ஆகியோரின் புனித பாதணிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன

Posted On: 02 NOV 2025 7:43PM by PIB Chennai

தகாத் ஸ்ரீ ஹர்மந்திர் ஜி பாட்னா சாஹிபில், ஸ்ரீ குரு கோபிந்த் சிங் மகாராஜ் மற்றும் மாதா சாஹிப் கவுர் ஆகியோரின் புனித பாதணிகளான புனித ஜோர் சாஹிப், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், நவம்பர் 1-ஆம் தேதி சடங்கு முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தப் பிரதிஷ்டை, ஒன்பது நாள் "குரு சரண் யாத்திரை"யின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது, இதன் போது புனித நினைவுச்சின்னங்கள் தில்லியிலிருந்து பாட்னாவிற்கு மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் வழியாக பயணித்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரைப் பாதையில் வரிசையில் நின்று தங்கள் மரியாதையை செலுத்தினர்.

இந்த விழாவின் தனிப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி திரு ஹர்தீப் சிங் பூரி பேசினார்.  குரு மகாராஜருக்கு தனது குடும்பத்தினர் பல நூற்றாண்டுகளாக ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்தார். 300 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூதாதையர்களுக்கு புனித நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மீக பிரமுகர்கள் கலந்து கொண்டது, மரியாதை மற்றும் வகுப்புவாத சகோதரத்துவத்தின் இணக்கமான கூட்டத்தைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185589 

***

AD/RB/RJ


(Release ID: 2185736) Visitor Counter : 6