தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
புனே நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நெட்வொர்க் தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு செய்தது
प्रविष्टि तिथि:
31 OCT 2025 2:13PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025, செப்டம்பர் மாதத்தில் மகாராஷ்டிரா உரிமச்சேவை பகுதியான புனேயில் மேற்கொண்ட சுயேச்சையான இயக்க சோதனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த சோதனைகள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது. நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன பகுதிகள், பொது போக்குவரத்து மையங்கள், அதிவேக வழித்தடங்கள் போன்ற பலவகை பயன்பாட்டு சூழல்களில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாட்டை அளவிடும் வகையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
2025 செப்டம்பர் 8 முதல் 12 வரை புனே நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 415.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட 379.9 கிலோமீட்டர் தூரமும் அடங்கும். 27 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ தட சோதனைகளும் 14 முக்கிய இடங்களின் சோதனைகளும் 8.6 கிலோமீட்டர் நடைபயண சோதனைகளும் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184561
***
(Release ID: 2184561)
SS/SMB/AS/SH
(रिलीज़ आईडी: 2184843)
आगंतुक पटल : 23