சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிறைவடைந்த நிலையில் இதில் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2025 5:53PM by PIB Chennai

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் சம்மேளனத்துடன் இணைந்து புதுச்சேரி தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகமும் புதுச்சேரி அரசின் தொழில்துறையும் ஏற்பாடு செய்திருந்த வாங்குவோர் விற்போர் சந்திப்பு இன்று நிறைவடைந்தது.

இந்த 2 நாள் நிகழ்வில் 16-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 25-க்கும் அதிகமான பிரதிநிதிகளும் சுமார் 320 எம்எஸ்எம்இ நிறுவனங்களும், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்று நிறைவு விழாவில் தெரிவித்த புதுச்சேரி அரசின் தொழில்துறை செயலாளர் திரு ஏ. விக்ரந்த் ராஜா, உள்ளூர் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளுடன் நேரடி தொடர்பு இந்த சந்திப்பின் மூலம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

இந்த சந்திப்பின் போது 500க்கும் அதிகமான வணிகர்கள் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். சுமார் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் நடப்பு நிதியாண்டிலேயே புதுச்சேரியிலிருந்து ரூ.15.30 கோடிக்கும் கூடுதலாக ஏற்றுமதி வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

***

  SS/SMB/AS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2184799) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English