நிலக்கரி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        எஸ் இ சி  எல் நிறுவனம் சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ் 43 உயிரி கழிப்பறைகளை அமைத்துள்ளது 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 3:02PM by PIB Chennai
                
                
                
                
                
                
                கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான சௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், சிறப்பு இயக்கம் 5.0ன் ஒரு பகுதியாக சுரங்கப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும்  நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் மொத்தம் 43 உயிரி கழிப்பறைகளை நிறுவியுள்ளது.
இந்த முயற்சியில் சோஹாக்பூர் பகுதியில் 16 கழிப்பறைகள் மற்றும் பாட்கான் பகுதியில் 27 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கத் தளங்களில் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான வசதிகளை வழங்கி பணியிடச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஸ் இ சி  எல் நிறுவனம், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பொது சேவை ஆகிய துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் சுரங்கப் பகுதிகளில் பணியாளர்களின் நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184143
***
SS/SE/SH
                
                
                
                
                
                (Release ID: 2184288)
                Visitor Counter : 7