புவி அறிவியல் அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தில் வானிலை முன்கணிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் விவாதித்தார்
प्रविष्टि तिथि:
29 OCT 2025 4:31PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, மாநிலத்தில் வானிலை முன்கணிப்பு சூழல் மற்றும் பேரிடர் தயார்நிலை உட்கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல் குறித்து விவாதித்தார். இச்சந்திப்பின் போது துல்லியமாக வானிலை குறித்து அறிந்து கொள்வதற்கான ரேடாரை இமாச்சலப் பிரதேசத்தில் பொருத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்து கொண்டார். அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கை அடுத்து மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பாக பேரிடரால் பாதிக்கப்படக் கூடிய இடங்களில் கூடுதலாக ரேடார் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களை அமைக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்நடவடிக்கை எதிர்காலத்தில் வானிலை தொடர்பான சவால்களை எதிர்கொள்ள சிறப்பானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183787
***
SS/IR/AG/SH
(रिलीज़ आईडी: 2183935)
आगंतुक पटल : 15