வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புத்தொழில் சூழலை வலுப்படுத்துவதற்காக பிரைமஸ் பார்ட்னர்ஸ் தனியார் நிறுவனத்துடன் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை கையெழுத்து
Posted On:
23 OCT 2025 3:38PM by PIB Chennai
நாட்டின் புத்தொழில் மற்றும் புதுமைகண்டுபிடிப்புகள் சூழலை வலுப்படுத்துவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, பிரைமஸ் பார்ட்னர்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. திறன் மேம்பாடு செயல்பாடுகள், நிபுணர் வழிகாட்டுதல், சந்தை அணுகல் முன்முயற்சிகள், கொள்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகள் மூலம் தயாரிப்புகளின் தொடக்க நிலை மற்றும் வளர்ந்து வரும் நிலைகளுக்கான ஆதரவை மேம்படுத்துவதற்கு இக்கூட்டாண்மை வழிவகுக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் நிறுவனத்தை மையமாகக் கொண்ட புதுமை கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கான தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு மீண்டும் வலியுறுத்துகிறது என்று கூறினார். நாட்டின் புத்தொழில் சூழல் அமைப்பு தற்போது உலகளாவிய மாற்றத்தின் உச்சத்தில் உள்ளது. கொள்கை, தொழில்துறை மற்றும் புதுமைகண்டுபிடிப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக இந்தியா உருவாவதற்கு புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181809
***
SS/IR/KPG/SH
(Release ID: 2181947)
Visitor Counter : 5