சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் பயனாளர் பதிவு மற்றும் விநியோக நடவடிக்கைகள் – ஜிப்மர் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2025 6:08PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், தொழில்நுட்ப ரீதியில் சுகாதார கட்டமைப்பு உருவாக்குவதற்கான மத்திய அரசின் முன்முயற்சியாகும். நாடு முழுவதிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் மக்களின் சுகாதாரம் தொடர்பான பதிவுகளை பாதுகாப்பாக சேமித்து ஒருங்கிணைத்து தேவைப்படும் நேரங்களில் பகிரும் வகையில் பயனாளர் ஒவ்வொருவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவமனை பயனாளர்களின் விவரங்களை இலவசமாக பதிவு செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது மருத்துவம் சார்ந்த பதிவுகளை டிஜிட்டல் முறையில் இணைத்து நிர்வகிக்கவும், சிகிக்சை குறித்த அனுபவங்களை மேம்படுத்தவும் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் வழிவகுக்குகிறது.

மருத்துவ பரிந்துரைகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை பாதுகாக்க டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்ட விவரங்களை முறையான அனுமதியுடன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை எளிதாக பெற உதவுகிறது. மேலும் நோய்களுக்கான சிகிக்சை முறைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இது வழி செய்கிறது.

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிக்சைகளும் மேற்கொள்ளப் படுகின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது என்றும் இதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த சுகாதார சேவைகளை வழங்க வழி வகுக்குகிறது என்றும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி தெரிவித்தார். மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சேவையை பெறுவதற்கு அலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணுடன் கூடிய அடையாள அட்டையை சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வசதி அனைத்து சேவை நாட்களிலும் வழக்கமான அலுவலக நேரங்களில் செயல்படும் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181912

 

***

SS/SV/AS/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2181923) வருகையாளர் எண்ணிக்கை : 58
இந்த வெளியீட்டை படிக்க: English