சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் தாபூர் பல்லுயிர் மேலாண்மைக் குழுவிற்கு ரூ.67 லட்சத்தை தேசிய பல்லுயிர் ஆணையம் விடுவித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2025 8:58PM by PIB Chennai

உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதற்கும், சமமான நன்மைகளைப் பகிர்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் தாலுகாவில் அமைந்துள்ள தாபூர் பல்லுயிர் மேலாண்மைக் குழுவிற்கு (பிஎம்சி) மகாராஷ்டிர மாநில பல்லுயிர் வாரியம் மூலம் ரூ. 67 லட்சத்தை தேசிய பல்லுயிர் ஆணையம் விடுவித்துள்ளது.

உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002-ன் கீழ் நிறுவப்பட்ட தேசிய பல்லுயிர் ஆணையத்திடம், இந்தியாவின் பரந்த உயிரியல் வளங்கள் மற்றும் தொடர்புடைய பாரம்பரிய அறிவை அணுகுவதை ஒழுங்குபடுத்தும் முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வளங்களின் வணிக பயன்பாட்டிலிருந்து எழும் நன்மைகள், சமத்துவம், நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஏற்ப, உள்ளூர் சமூகங்கள் உள்ளிட்ட பயனாளிகளுடன் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளப்படுவதையும் ஆணையம் உறுதி செய்கிறது.

இந்த நிகழ்வில், ஒரு நிறுவனம் தாபூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள மண்ணிலிருந்து நுண்ணுயிரிகளை அணுகி, பின்னர் புரோபயாடிக் துணை தயாரிப்புகளை உருவாக்கியது.  தேசிய பல்லுயிர் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அணுகல் மற்றும் நன்மை பகிர்வு தொகை, இந்த வணிக பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட நன்மைகளை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181671

***

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2181684) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English