பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் சிறப்பு பிரச்சாரம் 5.0 முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
प्रविष्टि तिथि:
18 OCT 2025 9:33AM by PIB Chennai
தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் பணியிட செயல்திறனை மேம்படுத்துதல் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நோக்கில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை , சிறப்பு பிரச்சாரம் 5.0 -ல் தீவிரமாகப் பணியாற்றுகிறது. அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி அக்டோபர் 31 வரை தொடரும் இந்தப் பிரச்சாரம், தூய்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் இணைக்கப்பட்ட துணை அலுவலகங்கள் மற்றும் துறையின் அனைத்து அதிகாரிகளிடமிருந்தும் உற்சாகமான பங்கேற்பைக் கண்டுள்ளது. இன்று வரை, 585 க்கும் மேற்பட்ட தூய்மை தளங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பிரச்சாரம் 5.0- க்கு வழிவகுக்கும் எக்ஸ் மற்றும் பேஸ்புக் போன்ற பிற தளங்களில் பல பதிவுகள் மூலம் சமூக ஊடகங்களில் அதிக ஈர்ப்பைப் பெற்று வருகிறது. பிரச்சாரத்தின் போது, பணிச்சூழலில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கும், ஊழியர்களின் அலுவலக அனுபவத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சமீபத்தில் நார்த் பிளாக்கில் இருந்து தில்லியில் உள்ள கர்தவ்ய பவன் 3- க்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு நவீன அலுவலக வளாகமாகும்.
அக்டோபர் 02, 2025 அன்று சிறப்பு பிரச்சாரம் 5.0 தொடங்கியதிலிருந்து, 52,112 க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் 2474- க்கும் மேற்பட்ட மின்-கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 20,391 கோப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
இட மேலாண்மை மற்றும் கள அலுவலகங்களின் பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி அரசு அலுவலகங்களின் ஒட்டுமொத்த தூய்மை மேற்கொள்ளப்பட்டது. கழிவுகளை அகற்றுவதன் மூலம் இதுவரை ரூ.2,80,890/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றுதல் மற்றும் கோப்புகளை அகற்றுதல் காரணமாக சுமார் 8228 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரச்சாரம் 5.0, சுத்தமான அலுவலக சூழலைப் பராமரிக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், முடிவெடுப்பதை விரைவுபடுத்தவும், நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் ஆயத்த கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அடைந்து அதை ஒரு பெரிய வெற்றியாக மாற்ற பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உறுதிபூண்டுள்ளது.
******
(Release ID: 2180630 )
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2180724)
आगंतुक पटल : 21