சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மொழிகளுக்கு இடையே பாலமாகத் திகழும் பாஷினி மொழிப்பெயர்ப்பு செயலி பன்முக மொழிகள் கொண்ட இந்தியாவிற்கான வெற்றியாகும்
Posted On:
15 OCT 2025 3:12PM by PIB Chennai
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழிநடத்தப்படும் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கத்தின் கீழ், ஒரு முன்னோடி முயற்சியாக பாஷினி மொழிப்பெயர்ப்பு செயலி திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிநவீன மொழிப்பெயர்ப்பு சாதனமாக உருவாக்கப்பட்டு அனைத்து இந்திய மொழிகளிலும் டிஜிட்டல் வடிவில் மொழிபெயர்க்கக் கூடிய புரட்சிகரமான சாதனமாக பாஷினி உருவெடுத்துள்ளது.
குரல் பதிவை எழுத்து வடிவமாக மொழிபெயர்ப்பு செய்யும் கருவிகளுடன் கூடிய தளமாக உள்ள பாஷினியில், நிர்வாகத் துறையில் மொழியால் ஏற்படும் தடைகளை சிறந்த முறையில் களைவதற்கும், பொது தகவல் தொடர்புக்கும் பல்வேறு மொழிகளில் டிஜிட்டல் வடிவிலான சூழல் அமைப்பில் ஒவ்வொரு இந்தியரும் முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்யவும் சேவைகள் அமைந்துள்ளன.
நிர்வாக நடைமுறைகளை உள்ளடக்கிய தெளிவான கருவியாகவும், பொது தகவலுக்கான பன்மொழி அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் காரைக்காலில் உள்ள ஒருங்கிணைந்த மீன்பிடி மற்றும் நவீன துறைமுகத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், உரையாற்றிய பிரதமரின் இந்தி மொழியில் அமைந்த உரையை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் கருவியாக புதுச்சேரி அரசால் பயன்படுத்தப்பட்டது. மேலும் புதுச்சேரியில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆற்றிய உரையை தமிழில் மொழிப் பெயர்க்க இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது.
தமிழ் மொழி பேசும் மக்கள், அவரது உரையை நேரடியாக புரிந்து கொள்வதை பாஷினியின் இந்தக் கருவி உறுதி செய்தது. பிற மொழியில் ஆற்றும் உரைகளை நேரடியாக உடனுக்குடன் மொழி பெயர்த்து உரைநடையாக தமிழில் வழங்கும் கருவியாக இது அமைந்துள்ளது. இவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட உரைகள், நேரடியாகவும், தேசிய தகவல் மையத்தின் இணையதளம் வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது. இந்த முயற்சி இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
***
SS/SV/KPG/KR
(Release ID: 2179557)
Visitor Counter : 29