அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஓஜே287 என்ற விண்வெளிக் குவாசரில் ஒன்றையொன்று சுற்றிவரும் இரண்டு கருந்துளைகள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
10 OCT 2025 4:32PM by PIB Chennai
விண்வெளியில் ஓஜே287 என்ற குவாசரில் ஒன்றையொன்று சுற்றிவரும் இரண்டு கருந்துளைகள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அரிய விண்வெளி கண்டுபிடிப்பில், இந்தியாவின் ஆர்யபட்டா ஆய்வுக் கழகம் மற்றும் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அலோக் சி. குப்தா, சுபம் கிஷோர், அ கோபகுமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அடங்கிய பன்னாட்டு ஆய்வுக்குழு இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
இரண்டு கருந்துளைகள் 12 ஆண்டுச் சுழற்சியில் வலம் வருவதை, ஓஜே 287-ன் சீரான ஒளிர்வு மாற்றங்களைக் கொண்டு விஞ்ஞானிகள் கணித்தனர். டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த லங்கேஸ்வர் டே மற்றும் அ கோபகுமார் தலைமையிலான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கருந்துளைகளின் சுற்றுப்பாதையின் இறுதி வடிவம் துல்லியமாக வரையறுக்கப்பட்டது. மேலும், ஆரியபட்டா வானியல் ஆய்வுக் கழகத்தின் சுபம் கிஷோர் மற்றும் அலோக் சி குப்தா ஆகியோர், நாசாவின் டெஸ் விண்வெளித் துணைக்கோளின் தரவுகளைப் பயன்படுத்தி, இரண்டாவது கருந்துளையின் பிரகாசமிகு செயல்பாட்டை உறுதி செய்தனர்.
இந்த ஆராய்ச்சியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான ஆரியபட்டா வானியல் ஆய்வுக் கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது.
ரேடியோ ஆஸ்ட்ரான் போன்ற அதித்திறன் கொண்ட தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட்ட வானொலி அலை உமிழ்வுப் பிம்பங்களில், எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் இரண்டு கருந்துளைகளின் உருவங்களும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் ஈர்ப்பு அலைகள் குறித்த புரிதலை மேம்படுத்த ஒரு முக்கியமான அறிவியல் களமாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177369
***
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2178718)
आगंतुक पटल : 21