சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி ஒற்றுமைப் பேரணி

प्रविष्टि तिथि: 13 OCT 2025 4:36PM by PIB Chennai

நாட்டின் பெருமையைப் போற்றும் வகையிலும், மக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையிலும் இளைளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை உருவாக்கும் வகையிலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதயாத்திரையை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் செயலி மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த யாத்திரை மக்கள் பங்களிப்புடன் நாட்டைக் கட்டமைப்பதற்கான முன்முயற்சியில் இளையோர் முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து நடைபெறும் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 6-ம் தேதியன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் மை பாரத் தலைமையில் ஒற்றுமைப் பேரணியைத் தொடங்குவதாக அந்த அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த நாடு தழுவிய முன்முயற்சி நாட்டில் உள்ள இளைஞர்களிடையே ஒற்றுமை, நாட்டுப்பற்று மற்றும் குடிமக்களுக்கான பொறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் இளைஞர்கள், அன்றாட வாழ்க்கையில் ஒரே இந்தியா தற்சார்பு இந்தியா என்ற கொள்கைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மைபாரத் இணையதளத்தில் அக்டோபர் 6-ம் தேதி இதற்கான பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். இதில் சமூக ஊடக ரீல்ஸ் போட்டி, கட்டுரைப்போட்டி இளம் தலைவர்கள் திட்டம் போன்ற போட்டிகளும் நடத்தப்படுகிறது.  இதில் வெற்றி பெறும் 150 போட்டியாளர்கள் தேசிய அளவிலான பாதயாத்திரையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

நாடு முழுவதும் ஒற்றுமைப் பேரணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதாக தேசிய நாட்டுநலப்பணித்திட்டம் மண்டல இயக்குநர் டாக்டர் சாமுவேல் செல்லய்யா தெரிவித்தார். மாவட்ட அளவிலான பாதயாத்திரைகள், (அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை) நடைபெறும் என்றும் இதில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று கூறினார். இந்தப் பாதயாத்திரைக்கு முன்னதாக மக்களிடையே விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டுரை மற்றும் விவாதப் போட்டிகள், சர்தார் படேல் வாழ்க்கைக் கருத்தரங்குகள், தெருவோர நாடகங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இளைஞர்களிடையே போதை ஒழிப்பு உறுதி மொழியேற்பு நிகழ்வும் நடைபெறும் என்றும் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சிகளும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாத யாத்திரைப் பேரணி நவம்பர் 26 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறும் என்று மைபாரத் மாநில இயக்குநர் திரு செந்தில்குமார் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் படேல் பிறந்த இடமான கர்மசாத்திலிருந்து கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை வரை 152 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

இந்தப் பேரணிக்கு முன்னதாக பாதயாத்திரை செல்லும் அனைத்து  கிராமப்புறங்களிலும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, மைபாரத் தொண்டர்கள் மற்றும் இளம் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பன்முக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், சர்தார் படேலின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடு தழுவிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 10 போட்டியாளர்கள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான தேசிய இளையோர் தினத்தன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

 

***

SS/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2178489) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English