சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
துப்புரவு பணியாளர்களுக்கு நமஸ்தே திட்டத்தின் கீழ் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம்
प्रविष्टि तिथि:
09 OCT 2025 3:19PM by PIB Chennai
எந்திரங்கள் வாயிலாக துப்புரவு சூழல் அமைப்பிற்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களுக்கு அதற்கான உபகரணங்கள் மற்றும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சி கோவா மாநிலம் பனாஜியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் முன்னிலையில் நடைபெற்றது.
கழிவு நீர் தொட்டிகள் மற்றும் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தொகுப்பு வழங்குதல்.
துப்புரவு பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டைகள் விநியோகம்
அவசரகால மீட்பு பணிகளுக்கான பிரிவில் பணியாற்றுபவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்
எந்திரங்கள் வாயிலாக துப்புரவு சூழல் அமைப்பிற்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் நவநாகரீக உடைகள் நிகழ்ச்சியை நடத்துதல்
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
நமஸ்தே திட்டத்தின் கீழ் இதுவரை 90,494 துப்புரவு பணியாளர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 84,077 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 68,341 பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
(Release ID: 2176763 )
SS/SV/SG/SH
(रिलीज़ आईडी: 2177045)
आगंतुक पटल : 24