பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை விநாடி-வினா போட்டி: மண்டல அளவிலான போட்டிகளுக்கு 166 அணிகள் தேர்வு
Posted On:
07 OCT 2025 3:19PM by PIB Chennai
நாடு முழுவதும் இந்திய கடற்படையால் நடத்தப்பட்ட விநாடி-வினா போட்டியில் தகுதி சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த விநாடி-வினா போட்டியில் 166 அணிகள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மண்டல அளவிலான போட்டிகள் இம்மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த விநாடி-வினா போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய கடற்படையால் நடத்தப்பட்டு வரும் இந்த தேசிய அளவிலான விநாடி-வினா போட்டிகள் அறிவை வளர்த்து கொள்வதற்கும், இளைஞர்களின் மனதில் தேசிய உணர்வை ஏற்படுத்துவதற்கும் கடல்சார் வளங்கள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கிலும் நடத்தப்படுகிறது.
இந்த விநாடி-வினாவுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175770
***
SS/SV/AG/SH
(Release ID: 2175985)
Visitor Counter : 5