சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம்

Posted On: 05 OCT 2025 4:14PM by PIB Chennai

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மண்டல கடவுச்சீட்டு அலுவலர் திரு. எஸ். விஜயகுமார் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அக்டோபர் 2, அன்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தக் குழு ராயலா டவர்ஸ் வளாகத்தையும் அருகிலுள்ள பேருந்து நிலையப் பகுதியையும் சுத்தம் செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

  

தூய்மைப்படுத்தும் பணியைத் தொடர்ந்து, தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரிப்பதில் குடிமக்களின் தீவிர பங்கேற்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊழியர்களால் மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது.

  

பின்னர் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல கடவுச்சீட்டு அலுவலர் திரு. எஸ். விஜயகுமார் மரக்கன்று நட்டார். இதில் கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இது ஒரு தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை நோக்கி செல்லும் தேசிய பணி மற்றும் 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை நோக்கிய பயணமாகும்.

***

AD/RJ


(Release ID: 2175107) Visitor Counter : 12
Read this release in: English