தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லி மற்றும் பெங்களூருவில் உள்ள சி-டாட் நிறுவனத்தின் ஆய்வக வசதிகளை பயன்படுத்திக்கொள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி
Posted On:
30 SEP 2025 2:46PM by PIB Chennai
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சி-டாட் நிறுவனம் சமர்த் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு நவீன தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 புத்தொழில் நிறுவனங்களுக்கு புதுமையான தொலைத்தொடர்பு பணிகள், சைபர் பாதுகாப்பு, 5-ஜி, 6-ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையதள அடிப்படையிலான செயல்பாடுகள், குவாண்டம் தொழில்நுட்பம் போன்றவை குறித்த ஆய்வுகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலா ஆறு மாத காலத்திற்கு இரண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை சி-டாட் மையம் வழங்குகிறது.
பெங்களூரு மற்றும் தில்லியில் உள்ள சி-டாட் நிறுவனத்தின் ஆய்வக வசதிகளை புத்தொழில் நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173083
***
SS/SV/SH
(Release ID: 2173271)
Visitor Counter : 4