பாதுகாப்பு அமைச்சகம்
பல தசாப்தக் கால அனுபவம், தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் உத்திசார் சிந்தனையை சமூகத்திற்கு அளிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஒரு தேசிய சொத்து: பாதுகாப்பு அமைச்சர்
प्रविष्टि तिथि:
29 SEP 2025 9:41PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னாள் படைவீரர் நலத்துறை, புதுதில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் ஏற்பாடு செய்திருந்த 2025 தேசிய மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் செப்டம்பர் 29, 2025 அன்று உரையாற்றினார். 'வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் முன்னாள் படைவீரர் நலன்' என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, மாவட்ட மற்றும் மாநில சைனிக் வாரியங்கள், பொது மீள்குடியேற்ற இயக்குநரகம் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறைகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கிறது.
முன்னாள் படைவீரர்களின் சாதனைகள், சக படைவீரர்களை மட்டுமின்றி, இளைஞர்களையும் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் நாட்டிற்கு சேவை செய்ய ஊக்குவிக்கின்றன என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார் . "பல தசாப்த கால அனுபவம், தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் உத்திசார் சிந்தனையை சமூகத்திற்கு அளிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஒரு தேசிய சொத்தாக விளங்குகிறார்கள். சமூக மற்றும் பொருளாதார முயற்சிகளில் அவர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு சமூகங்களையும் ஒட்டுமொத்த நாட்டையும் வலுப்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.
இளைஞர்களை வழிநடத்துவதிலும், சமூக சிதைவைத் தடுப்பதிலும், போதைப்பொருள் பழக்கம் போன்ற சவால்களை எதிர்கொள்வதிலும் முன்னாள் படைவீரர்களின் முக்கிய பங்கை அமைச்சர் எடுத்துரைத்தார். முன்னாள் படைவீரர்களின் அனுபவம், ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம், சமூகங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும், அவர்களின் ஈடுபாடு இளைஞர்கள் செயல்திறனுடன் பொறுப்பான பாதைகளை நோக்கிச் செல்வதை உறுதி செய்ய உதவுகிறது என்றார்.
சமூக மேம்பாடு, பொது மக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களை வழிநடத்துதல் ஆகியவற்றில் முன்னாள் படைவீரர்களின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார். குளங்கள் அல்லது கோயில்களைக் கட்டுவதற்கு கிராமவாசிகள் கூட்டாக வேலை செய்யும் உதாரணங்களை சுட்டிக்காட்டி, அரசின் அணுகல் குறைவாக இருக்கும் பகுதிகளில், படைவீரர்களால் சமூகங்களை அணிதிரட்டவும், ஒற்றுமை, சமூக ஒற்றுமை மற்றும் பங்கேற்பு நிர்வாகத்தை வளர்க்கவும் முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். "முன்னாள் படைவீரர்களே, சமூகங்களுக்குள் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், இதன் மூலம் சமூக மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துகிறார்கள்," என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172917
***
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2172962)
आगंतुक पटल : 17