சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஹாட் பாக்ஸ், பாத்திரங்கள், பிளாஸ்க் தொடர்பான தரநிலைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தர நிர்ணய அமைவனம் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2025 9:52PM by PIB Chennai

 

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS-பிஐஎஸ்) மானக் மந்தன் எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னை தரமணியில் உள்ள பிஐஎஸ்  தென் மண்டல அலுவலக வளாகத்தில் 24.09.2025 அன்று நடத்தியது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஹாட் பாக்ஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், இன்சுலேட்டட் பிளாஸ்க் ஆகியவை தொடர்பான இந்திய தரநிலைகளின் வரைவு திருத்தங்களைப் பற்றி  விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பிஐஎஸ் சென்னை கிளையின் விஞ்ஞானியும், இணை இயக்குநருமான திரு பி ஜே கெளதம் வரவேற்புரை நிகழ்த்தினார். அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஹாட் பாக்ஸ், ஹாட் பிளாஸ்குகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் போன்றவற்றின் தரம், பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மையை உறுதிப்படுத்தும் தர நிலைகள் குறித்து விளக்கினார்.

பின்னர் சென்னை, எம்எஸ்எம்இ சோதனை மையத்தின் இணை இயக்குநர் திரு வி. கோவிந்தராஜ், எம்எஸ்எம்இ துறைக்கு கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அமைக்கவிருக்கும் சோதனை வசதிகள் குறித்து விளக்கினார். தரநிலைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தி, தரமான தயாரிப்புகளை உருவாக்க உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.

பின்னர் நடைபெற்ற ஆலோசனை அமர்வில், தொழில்துறை பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், சோதனை ஆய்வக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த 55 பேர் பங்கேற்றனர்.

****

SS/PLM/AG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2171247) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English