சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொழில்கல்விச் சூழலை வலுப்படுத்துவதற்கான தென்மண்டல பயிலரங்கு சென்னையில் நடைபெற்றது
Posted On:
24 SEP 2025 6:03PM by PIB Chennai
M4K0.jpeg)
தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமம், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஆகியவை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து தென்மண்டலத்திற்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிலரங்கை இன்று (24.09.2025) சென்னையில் நடத்தியது.
அரசு உயரதிகாரிகள், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனத் தலைவர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். தர உத்தரவாதம், முயற்சிகளை ஒருங்கிணைத்தல், எதிர்காலத்திற்கு தேவையான திறன் மேம்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை குறித்து இப்பயிலரங்கில் கவனம் செலுத்தப்பட்டது.
L4W2.jpeg)
இப்பயிலரங்கில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, இது போன்ற மண்டல அளவிலான பயிலரங்குகளை நடத்தி வரும் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திறன் மேம்பாட்டை வலுப்படுத்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார்.
இப்பயிலரங்கில் உரையாற்றிய தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு கே வீர ராகவ ராவ், தொழிற்பயிற்சி புத்தாக்கங்களில் மாநில அரசின் உறுதிப்பாடு பற்றி எடுத்துரைத்தார். வாகன உற்பத்தி, தொழில்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில், திறன் மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக திரு வீர ராகவ ராவ் கூறினார்.
1BLY.jpeg)
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170792
***
AD/IR/KPG/SH
(Release ID: 2170845)
Visitor Counter : 21