சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2025 5:51PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் 30-வது பூசன் சர்வதேச திரைப்பட விழா-வில் கலந்து கொள்வதற்காக தென்கொரியா சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக 2025 செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, படைப்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தான தனது கருத்துக்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில், பிஎஃப்சி கமிட்டி இயக்குனர் திரு காங் சுங்க்யூ, இந்தியாவிற்கான தென்கொரிய தூதர் திரு நிஷிகாந்த் சிங், தகவல் ஒலிபரப்புத்துறை இணைச்செயலர் திரு ப்ரித்துல் குமார் மற்றும் பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

***
AD/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2170224)
வருகையாளர் எண்ணிக்கை : 6