சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சென்னையில் திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிலரங்கை செப்டம்பர் 24 அன்று நடத்துகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2025 4:49PM by PIB Chennai

தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமம், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து தென்மண்டலத்திற்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன. சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கில் 2025 செப்டம்பர் 24 அன்று  இப்பயிலரங்கு நடைபெறவுள்ளது.

தொழிற்கல்வி மற்றும் பயிற்சி சூழலை வலுப்படுத்துவதற்காக தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் முன்முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை இப்பயிலரங்கு ஒருங்கிணைக்கும். மாநில அளவிலான திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள் தர உறுதிப்படுத்துதலில் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் பங்களிப்பு, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட வளர்ந்து வரும் எதிர்கால திறன்களை ஒருங்கிணைத்தல், விருது வழங்கும் அமைப்புகள் மற்றும் மதிப்பீட்டு முகமைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடு, திறன் மேம்பாடு முன்முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வியை செயல்படுத்துதல் தொடர்பான அமர்வுகள் இப்பயிலரங்கில் இடம்பெறும்.

இந்த ஒரு நாள் பயிலரங்கில் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமம், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.     

***

AD/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2170177) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English